
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் டேக்கி ஸன்சுகேவுடன் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கலந்துரையாடியுள்ளார். ஜப்பானிய அமைச்சருடன், கொழும்பில் பயனுள்ள கலந்துரையாடலை நடத்தியதாக அமைச்சர் சப்ரி தெரிவித்தார். வர்த்தகம், முதலீடு மற்றும் மேம்பாட்டு உதவிகள் மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக அவர் கூறியுள்ளார்.