எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பணிகளுக்காக 770 மில்லியன் ரூபாவை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு நிதி அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
இது தொடர்பான கடிதம் நிதி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் செலவினங்களுக்காக முன்னர் நிதியமைச்சிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் பணம் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபா செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இருந்து அந்த தொகையை ஒதுக்குவதற்கு நாடாளுமன்றம் அண்மையில் அனுமதி வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.