
வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பல்கலைக்கழக மாணவர்களின் 2வது நாள் பேரணி கிளிநொச்சியிலிருந்து ஆரம்பமானது.
இரணைமடு சந்தியிலிருந்து ஆரம்பமான பேரணியில் பரந்தன் சந்தியில் மன்னார் மக்கள் இணைந்து கொண்டனர்.
தொடர்ந்து விசுவமடு பகுதியில் பெருமளவான மக்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுடன் கலந்து ஆதரவளித்தனர்.
தொடர்ந்து தொடர் பேரணியாக சென்ற மக்கள் தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து உறுதி மொழி பெற்று மக்கள் திரளான ஆதரவுடன் முல்லைத்தீவு நோக்கிய பயணம் இடம்பெற்றது.









