லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரிப்பு!

லாஃப் சமையல் எரிவாயு விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுவதாக லாஃப் சமையல் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, 12.5 கிலோ நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் 200 ரூவாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் புதிய விலையாக 5,280 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 5 கிலோகிராம் நிறை கொண்ட சிலிண்டர் 80 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 5, 280 ரூபாவுக்கும், 2 கிலோ நிறையுடைய எரிவாயு சிலிண்டர் 32 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 845 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews