காத்தான்குடியில் அரசு கையடக்கிய பள்ளிவாசலில் புலனாய்வு பிரிவு காரியாலயமாக எதிர்ப்பு தெரிவித்து ஹர்தால் அனுஷ்டிப்பும் ஆர்ப்பாட்டம்!

உயிர்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் காத்தான்குடியில் ஸாரானுடன் தொடர்புடைய பள்ளிவாசல் என அரசாங்கம் கையடக்கிய ஜாமிஉல் ஆதர் ஜும்ஆ பள்ளிவாசலை  அரச புலனாய்வு பிரிவின் காரியாலயமாக இயங்குவதற்கு முயற்சித்ததையடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளிவாசலை பாதுகாப்போம் எனும் தலைப்பில் இன்று திங்கட்கிழமை (06)  காத்தன்குடியில் வர்தக நிலையங்களை பூட்டி ஹர்தால் அனுஷ்டித்து  ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய காத்தான்குடி கப்பல் ஆலீம் வீதியிலுள்ளஜாமிஉல் ஆதர் ஜும்ஆ பள்ளிவாசலை பாதுகாப்பு அமைச்சு பொறுப்பேற்றிருந்த இந்த பள்ளிவாசலில் புலனாய்வு பிரிவு திறக்க முயற்சிகள் இடம்பெற்ற நிலையில் அதற்கு எதிர்ப்பு காத்தான்குடி பொறுப்பு வாயந்த நிறுவனங்களின் கூட்டமைப்பு பள்ளிவாசலை பாதுகாப்போம்  என அறவழிப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததையடுத்து

இதனையடுத்து வர்த்தக நிலையங்கள், அரச நிறுவனங்கள், பொதுசந்தைகள், வங்கிகள் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டு மக்கள் வீட்டுக்குள் முடங்கியதுடன் வீதிகள் வீதிகள் வெறிசோடி காணப்பட்டதுடன் ஹர்;தால் காரணமாக வர்த்தக ஸ்தாபனங்கள் பொதுச் சந்தைகள் என்பன மூடப்பட்டு இயல்பு நிலை முற்றாக ஸ்தம்பிதம் அடைந்திருந்தன.

இந்த நிலையில் அரசு கையடக்கிய பள்ளிவாசலின் முன்னால் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் சிறுவர்கள் உட்பட பொதுமக்கள் ஒன்று திரண்டு புனித இஸ்லாத்தை கொச்சைப்படுத்தி பள்ளிவாசலை நாசப்படுத்தாதே, பள்ளிவாயலை விடுவித்து பொது மக்கள் தொழுவதற்கும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்;கும் இடமளிக்கவும். பொலிசார் மீது பொது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதை சீரளிக்க வேண்டாம்.

இறைவனின் இல்லத்தை இல்லாமல் ஆக்காதே பொலிஸ் திணைக்களமே பள்ளியின் புனிதத்தில் கறைபடிந்த வரலாற்று தவறை செய்யாதே, இனவாதம் வளர்த்து தேசத்தை சீரளிக்காதே முஸ்லீம்களை வாழவிடு, மக்கள் தமது பணத்தில் கட்டிய பள்ளிவாசலை திருப்பிதா, இந்தப்பள்ளி வாயல் வக்பு சபையில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பள்ளிவாயலாகும். இந்தப் பள்ளிவாயலை பொலிசார் கையகப்படுத்துவதை நாங்கள் விரும்பவில்லை போன்ற சுலோகங்கள் தொங்கவிட்டவாறு கோஷங்கள் எழுப்பி சுமார் ஒருமணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இதன் போது அங்கு விரைந்த காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி இந்தப் பள்ளிவாயலுக்குள்  பொலிசார் வரமாட்டார்கள் என தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

 

Recommended For You

About the Author: Editor Elukainews