திடீரென பதவி விலகிய தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்

இலங்கைத் தமிழரசுக் கட்சி வாலிப முன்னணியின் தலைவரும் கோறளைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினருமான கிருஷ்ணபிள்ளை சேயோன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புக்களிலும் இருந்து விலகுவதாக கட்சி தலைவர் மற்றும் கட்சியின் தற்காலிக பொது செயலாளருக்கு பதிவுத் தபாலில் கடிதம் அனுப்பியுள்ளதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

கல்குடா தொகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கு மிகவும் சவால் மிக்க ஒருவராகவும் இவர் காணப்பட்டார் எனக் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையினை, தமிழ் தேசிய கூட்டமைப்பு அமைக்கும் வரை கட்சிக்காக அதிகளவில் செயற்பட்டு வந்ததாகவும் கட்சியோ கட்சியின் ஏனையவர்களோ மற்றும் முக்கியஸ்தர்களோ, முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதில் மெத்தன போக்கு காட்டியமையே இந்த பதவி விலகளுக்கான காரணம் எனவும் கூறப்படுகின்றது.

பதவி விலகல் தொடர்பில் கட்சி தலைமைக்கு கடிதம் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் அரச மற்றும் அரச ஆதரவு பெற்ற ஆயுத குழுக்கள் பலமாக இருந்த கால பகுதியில் மக்களின் அடக்கு முறைகளுக்கு எதிராகவும் போராடுவதில் சேயோன் மிக முக்கிய பங்கு வகித்திருந்ததாக கூறப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews