
துருக்கியில் வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் இருந்தால் தெரிவிக்குமாறு துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவு அல்லது துருக்கியிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு தகவல்களை சமர்ப்பிக்க முடியும் என துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் ஹசந்தி திஸாநாயக்க தெரிவித்தார்.