இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய உரையாடல்’ எனும் தலைப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசறிவியல் துறையும், அரசறிவியல் துறை பழைய மாணவர் ஒன்றியமும் இணைந்து ஏற்பாடு செய்து நடாத்தி வரும் தொடர் கருத்தரங்கின் 6 வது அமர்வு நேற்றைய தினம் பிற்பகல் 2:00 மணிக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம் பெற்றது.
யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறை தலைவர் பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் தலமையில் இடம் பெற்ற இவ் ஆறாவது அமர்வில்
அரசறிவியல் துறை சிரேஷ்ட விரிவுரையார் சி.திருச்செந்தூரன் இனப்பிரச்சினை தீர்வில் புதிய அரசியல் யாப்புக்கான தேவைப்பாடுகள்’ எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து குறித்த அமர்வில் கலந்து கொண்ட பல்கலைக்கழக. மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், அரசறிவியல் துறை பழைய மாணவர்கள், போன்றவர்களின் கேள்விகளுக்கு அரசறிவியல் துறை பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம், அரசறிவியல் துறை சிரேஸ்ர விரிவுரையாளர் சி.திருச்செந்தூரன், அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும், யாழ் பல்கலைக்கழக் வருகை விரிவுரையாளருமான சி.அ.யோதிலிங்கம் ஆகியோர் பதிலளித்தனர்.