மட்டக்களப்பு வைத்தியசாலை வீதியில் ஒருகோடி ரூபாவுக்கு மேல் பெறுமதியான இரு வலும்புரி சங்குகளை வியாபாராத்துக்காக எடுத்துச் சென்ற இருவரை விசேட அதிரடிப்படையின் நேற்று சனிக்கிழமை (11) மாலை கைது செய்து தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக மட்டக்களப்பு தலைமைய பொலிசார் தெரிவித்தனர்.
கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து அதிரடிப்படை கட்டளைத்தளபதி சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வருணஜெய சுந்தரவின் ஆலோசனைக்கமைய அதிரடிப்படை அம்பாறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஏ.டி.டி. நெத்தசிங்கவின் வழிகாட்டலில் மட்டக்களப்பு பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.சி. வௌட்டவிதான கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஆர்.டீ.சி.எஸ்.ரத்நாயக்காகவின் அறிவுறித்துக்கமைய
உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம்.பி.பி.எம். டயஸ் தலைமையிலான சப்இன் பெக்ஸ்டர் சி.நிஷங்க, பி.எஸ். பண்டார 13443, பி.எஸ்.அமரசேகர 67810, நிமேஷ; 90699, திலகரத்ன 90740, குமார 101082, நுவான் 76507, ஜெயரத்தின 19786 ஆகிய குழுவினர் சம்பவதினமான நேற்று மாலை 6 மணியளவில் மட்டக்களப்பு வைத்தியசாலை வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன் போது இருவர் வியாபாரத்துக்காக சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான இரு வலம்புரிசங்குகளை எடுத்துக் கொண்டு வந்துபோது அசர்களை விசேட அதிரடிப்படையின் சுற்றிவளைத்து மடக்கிபிடித்து கைது செய்ததுடன் வலம்புரிசங்குகளை மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்ட இருவரையும் மீட்கப்பட்ட வலம்புரிசங்குகளையும் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளதாகவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.