தற்போது நாட்டில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவின் வெற்றிலைக்கேணி, போக்கறுப்பு, முள்ளியான் கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் முடக்கப்பட்டுள்ளன.
குறித்த கிராம சேவகர் பிரிவுகளுக்கு பொறுப்பான கிராம சேவகர்கள் நேறறு மக்களுக்கு அறிவித்துள்ளனர் .
குறித்த வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, முள்ளியான், கேவில், போக்கறுப்பு ஆகிய. கிராமங்களிலிருந்து கிளிநொச்சியிலுள்ள ஆடை தொழிற்சாலைகளுக்கு அதிகளவான பணியாளர்கள் சென்றுவருவதாகவும் அதனால் அங்கு அதிகமான கொரோணா தொற்று அதிகரித்த நிலையிலேயே குறித்த முடக்கம் அறிவிக்கப் பட்டிருக்காலாம் எனவும், எனினும் நேற்று பிற்பகலே ஆடை தொழிற்சாலையில் பணியாற்றும் பணியாளர்கள் ஆடை தொழிற்சாலையினரால் தமது தொழிற்சாலையில் தங்கியிருந்து பணியாற்ற அழைத்துச் செல்லப்பட்டுள்ளாதாக அங்கிருந்து கிடைக்கின்ற செய்திகள் தெரிவிக்கும் அதே வேளை தமது கிராமங்கள் தனிமைப்படுத்தப்படுவதற்க்கான சரியான காரணம் அறிய முடியவில்லை எனவும் ஏற்கனவே பத்துநாள் பயணத்தடை நடைமுறையில் உள்ள நிலையில் மீண்டும் இவ்வாறு முடக்கப்படுவது தமக்கான வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் எந்த பொருட்களையும் கையிருப்பில் வைத்துக் கொள்ளவில்லை எனவும், அம்மக்கள் எமக்கு தெரிவிக்கின்றனர், எனினும் முடக்கம் தொடர்பில் பிரதேச செயலர், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையுடனோ தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக்கொள்ள முடியவில்லை.