
முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் இருந்து கப்ரக வாகனம் ஒன்றில் சூட்சுமமான முறையில் விறகுகளிற்குள் மறைத்து பதினைந்து முதிரை மரக்குத்திகளை ஏற்றி பயணித்த கப் ரக வாகனம் ஒன்று பொலிசாரால் மீட்டப்பட்டது.
கிளிநொச்சி தர்மபுரம் போலிசாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலை அடுத்து இன்று வீதி பரிசோதனையின் மூலம் கப்ரக வாகனம் போலிசாரால் மடக்கி பிடிக்கப்பட்டது. இதன்போது, குறித்த வாகனத்தை செலுத்திய சாரதியையும் போலிசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுர போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.


