ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் கிளிநோச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்

கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் அறுவடை விழாவில் கலந்து கொண்டார். இதன்போது ஜனாதிபதியிடம் இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மாளனத்தினர் ஜனாதிபதியை சந்தித்து, மாவட்டத்தில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடினர்.
தற்பொழுது நெல்லுக்கான உரிய விலை நிர்ணயிக்கப்படாமை காரணத்தினாலும் விவசாயிகளுக்கான உள்ளீடுகள் மற்றும் கிருமினாசினிகள், மானிய விலையில் பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பாகவும், தற்போதைய சூழலில் விவசாயிகள் எதிர்நோக்கும் எரிபொருள் பிரச்சனை தொடர்பாகவும் மகஜர்கள் கையளிக்கப்பட்டன.

Recommended For You

About the Author: Editor Elukainews