பாடசாலை மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய அடுத்த வருடம் முதல் 6 – 13 வரையான தரங்களுக்குரிய அனைத்து பாடத்திட்டங்களும் புதுப்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) பாடத்தை எட்டாம் தரத்தில் இருந்து ஆரம்பிப்பது தொடர்பிலான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இளைஞர்களின் எதிர்காலம் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் அடங்கியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு பாடம் ஒரு விருப்பப் பாடமாக அல்லது பிரதான பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்.
மாணவர்கள் அந்த பாடத்தை தகவல் தொழில்நுட்ப (IT) பாடங்களுடன் படிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
இந்த அனைத்து கல்வி மாற்ற செயல்முறைகளுக்கும் அடிப்படையான கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் கொள்கைக்கு இரண்டு வாரங்களில் அமைச்சரவை அமைச்சர்களின் ஒப்புதல் பெறப்பட உள்ளது.”என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.