
கேப்பாபுலவு மாதிரி கிராம மக்களுக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தால் ஆழ்குழாய்க் கிணறு அமைப்பதற்க்காக ரூபா 340000.00. நிதியுதவி நேற்று வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

கேப்பாபுலவு மாதிரி கிராமமத்தில் நீண்டநாளாக பாதுகாப்பான குடிநீரை பெறுவதற்க்கு வசதி இல்லாத நிலையில் குறித்த மக்களின் குடிநீர் தேவைக்காக அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக ஆழ் குளாய்க் கிணறு அமைப்பதற்காக குறித்த நிதி சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கௌரவ கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் தமது தொண்டர்களுடன் சென்று நேரடியாக குறித்த நிதி உதவியை வழங்கி வைத்தார்.
இதில் சமூகசேவையாளர் திரு. தயாபரன் மற்றும் கிராமநமக்கள் கலந்து கொண்டனர்.