சுததந்திர தினத்தில் குள்ளா அணிந்து எதிர்ப்பு தெரிவித்துவிட்டு யாழில் நடைபெற்ற இலங்கை சுததந்திர தினத்தில் விழாவில் ஜனாதிபதி ரணிலுடன் சொந்தம் கொண்டாடி 13 வது திருத்தம் தருவார் என்ற இந்திய கூலிப்படைகள் எல்லோருக்கும் சேர்த்து மாவட்டசபைகள் தான்தரமுடியம் என ஆப்பு வைத்தார் ரணில் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறப்பினருமான பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்தார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியில் மட்டு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு மட்டு அமெரிக்கள் மிஷன் மண்டபத்தில் திங்கட்கிழமை நடைபெற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குடும்பத்தை பார்த்து வாக்களிப்பது அல்ல இந்த தேர்தல் உலகத்தால் தேர்தல் முடிவுகளை பார்த்து கணிக்கப் போகின்ற தேர்தல் தமிழ் தேசத்துக்காக தமிழ் தேசத்துக்குரிய அங்கீகாரத்துக்காக எமது தேசத்தின் இறைமைக்காகவும் சுயநிர்ணயத்துக்காகவும் அந்த கொள்கையினுடைய முகமாக நீங்கள் ஒவ்வொருவரும் இருக்கின்றீர்கள்.
உங்களுடைய குடும்பமே செல்லாக்கோ இங்கு முக்கியமல்ல எழுதிவையுங்கள் தமிழ் தேசத்தின் சரித்திரத்திலே இந்த தேர்தல் எழுதப்படும் இந்த பாரிய சதியை முறியடித்த ஒரே ஒரு தரப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி பதிவு செய்யப்படும் அந்த சரித்திரத்திலே உங்களுடைய பங்கு சரியாக அமைவதற்கு இந்த செய்தியை மக்களிடம் கொண்டு செல்லவேண்டும்
நடக்க இருக்கின்ற இந்த பாரிய துரோகம் இதனை ஒரு மாத காலப்பகுதியில் நீங்கள் அம்பலப்படுத்தவேண்டும் அதுதான் உங்கள் பொறுப்பு இதுவரைக்கும் தமிழ் தேசத்தினுடைய பெரும்பான்மை தெரிந்தே தெரியாமலே இந்த இனத்தை காட்டிக் கொடுக்கின்றவர்களுக்கு வாக்களித்து வந்திருக்கின்றனர். அந்த மக்கள் இந்த உண்மைகளை சரியாக விளங்கி கொண்டால் இந்த தேசத்தையும் தங்களையும் காப்பாற்றுவார்கள்
கடந்த காலங்களில் உண்மையை அறியாமல் செய்த தவறாலே எங்களை கடுமையாக திட்டினார்கள் இந்த உண்மையை விளங்கிகொள்ளுகின்ற நாள் வரும் போது தான் கண்களை திறந்து சரியான வழிக்கு திரும்புவார்கள். காலங்களில் இந்த ஆழமான விடையங்களை விளங்கி கொள்ளாமல் திருந்தாமல் இருந்;ததற்காக எங்கள் மக்களை நிராகரிக்க முடியாது அவர்களுக்கு வாய்ப்பை கொடுக்கவேண்டும் அவர்களை அரைவனைக்கவேண்டும் எங்களுடைய மக்களை ஒன்று படுத்தவேண்டும் அதனை இந்த உள்ளூராட்சி சபை ஊடாகத்தான் செய்து முடிக்கவேண்டும்.
நேற்றவரைக்கும் ரணில் விக்கிரமசிங்க தமிழருடைய பெரிய நண்பன் என்கின்றனர் இந்த இனத்துக்காக உயிர் கொடுத்த விடுதலைப் புலிகள் ரணிலை தோற்கடித்தது தேசிய தலைவரும் அவருடைய உயிர்தியாகம் செய்கின்ற அமைப்புக்கு தமிழ் மக்கள் மீது அதரவுகிடையாத?
ரணில் தான் கொடுக்க இருந்ததாம் ஒற்றையாடசிக்குள் மாநிலங்களுக்கு எதுவுமே கிடையது என 30 வழக்குகள் தீர்ப்பிலே உச்ச நீதிமன்றில் அறிவித்ததது இந்த நீதின்றத்துக்கு மேலேயா ரணில் செய்யப் போகிறாரா?
மட்டக்களப்பில் இருக்கின்றார் தாடியைவளத்துக் கொண்ட இளம் ஆள் அவர் நேற்றவரைக்கும் மொட்டு கட்சியடன் கொஞ்சி குலாவியவர் அவர் தமிழ் தேசிய மக்கள் முன்னணி செய்வது நடைமுறைச் சாத்தியம் இல்லை என அவர் நடைமுறைச்சாத்தியம் என்று மொட்டு கட்சியுடன் இருந்தவர் பிள்ளையானுக்கு பக்கத்தில் நேற்றுவரைக்கும் இமைப்பாளராக இருந்தார்.;
அவர் வெல்லமுடியாது வியாபாரம் செய்ய முடியாது என்பதற்காக தமிழ் தேசியம் பேசவதற்கு வந்துள்ளார். ஆனால் அந்த தமிழ் தேசியமும் 13 வவது திருத்தம்தான் இவை எல்லாருக்கும் ரணில் ஆப்பு வைத்துள்ளார் எப்படி 8ம் திகதி ரணில் கொள்கைவிளக்கம் செய்தவர் அதில் 13 திருத்தம் பற்றியோ மாகாணசபை பற்றியே ஒரு வார்த்தை கூட இல்லை மாறாக மாவட்ட அபிவிருத்தி சபை இந்த ரணில் தான் தமிழீழ தேசத்துக்கு உரிமை கொடுக்க இருந்தவராம் இவரை பஷ;கரித்தது நாங்கள் செய்த அநியாயமாம்.
இந்தளவுக்கு ஒரு கேவலம் கெட்ட தலைமைத்துவத்தை வைத்துதான் நாங்கள் எப்போவே அழிந்திருக்க வேண்டியது உந்த தலைவர்கள் எப்போவே அழித்திருப்பினம். இன்று கோவணம் அறுந்து போயிருக்கு ரணில் தன்னுடைய உண்மையான முகத்தை காட்டியுள்ளார் குள்ளாவும் போட்டு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு நேற்று முன்தினம் ரணிலுடன் சொந்தம் கொண்டாடினர் சிறிலங்கா சுதந்திர தினத்திற்கு காலை சாப்பிடதை மத்தியானம் மறந்துவிடுகின்ற கும்பல்தான் இவர்கள்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஸ்தாபிக்கப்பட்ட நாளில் இருந்து மக்களுக்கு தெளிவான செய்தியை சொல்லிவருகின்றோம் காலத்துக்கு காலம் மாற்றப்படுகின்ற செய்தி அல்ல தமிழ் தேசிய தவைலரால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து என்றைக்கு விலகவேண்டி வந்ததோ அதற்கான காரணங்கள் அன்று தொடக்கம் இற்றைவரைக்கும் மாறாமல் ஒரே ஒரு விடையமாகத்தான் இருக்கின்றது
87 ம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் 13 திருத்தச்சட்டமான மாகாணசபை முறைமையை நிறைவேற்றிய நாளில் இருந்து அதனை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மாத்திரமல்ல முதலாம் கட்டமாக இந்திய படைகளுடனும் பின்னர் இரண்டாம் கட்டாக சிறிலங்க அரசுடன் சேர்ந்து போராட்டத்தை காட்டிக் கொடுத்த தரப்புக்களான புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் என அனைவரும் நிராகரித்தனா.
ஈ.பி.ஆர்.எல்.மட்டும்தான் 87 ம் ஆண்டு வடகிழக்கில் போட்டியிட்டு முதலமைச்சர் பதவியை பெற்று ஒரு சில மாதங்களிலே அந்த பதவிகளை வைத்து சாதிக்க முடியாது என தமிழீழத்தை பிரகடனப்படுத்தி இந்தியாவுக்கு ஓடிச் சென்றனர்
2009 மே 18 ம் திகதி விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டது 3ம் நாள் 21 ம் திகதி இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கே.எம்,நாராயணன் இலங்கைக்கு வந்தார் அப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளை சந்தித்தது அப்போது; இனழிப்பு நடைபெற்ற தருணத்திலே 2009 ம் ஆண்டு அதனை தீர்வாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என கட்டளையிட்டார் அதனை எதிர்த்தது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மட்டும்தான்.
கூட்டமைப்பு மைத்திரி ரணிலுடன் சேர்ந்து தயாரித்த 20015 ஆரம்பித்து 2017 செட்டெம்பர் வெளியிட்ட அந்த இடைக்கால அறிக்கை சிங்களத்திலே மிகத் தெளிவாக இலங்கை ஏக்கிய ராச்சிய ஒற்றையாட்சி என பதிவு செய்யப்பட்டது தமிழில் ஒருமித்த நாடு என்ற பூச்சாண்டியை காட்டி தமிழ் மக்களே விரும்பி ஒற்றையாட்சியை ஏற்றுக் கொள்ளவைக்கும் சதி 2018 நடந்த உள்ளூராட்சி தேர்தலிலே மக்களிடம் ஒற்றையாட்சிக்கான ஆணையைக் கேட்டுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிட்டது அதில் வாக்கு வங்கியில் சரிவை ஏற்படுத்தினோம் என்றார்.