இந்திய தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் புலிகள் அமைப்பை வைத்தே அரசியல் செய்கின்றனர்– மட்டக்களப்பு தமிழர் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன்!!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வந்தால் நன்றாக இருக்கும் ஆனால் இலங்கையிலே விடுதலைப் புலிகளின் தலைவர் இல்லை என உறுதிபடுத்திய பின்பு தான் இலங்கையின் பாதுகாப்பு தளர்த்தப்பட்டுள்ளது எனவே இந்திய தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் விடுதலைப் புலகள் அமைப்பை வைத்தே இன்று அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர் அந்த வகையில் விடுதலைப் புலிகளின் இருப்பு தேவையாக இருக்கின்றது என மட்டக்களப்பு தமிழர் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு தமிழர் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன் இன்று புதன்கிழமை (15) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.

பழநெடுமாறன் கூறியது போல இந்தியாவில் இது போல பல அரசியல் தலைவர்கள் இங்குள்ள மக்களை உசுப்பு ஏற்றுவதும் மக்களை குழப்பமடைய வைப்பதும் ஒரு வழக்கமான செயற்பாடாக செய்கின்றனர் .

இலங்கையை அவர்கள் வழைத்திருந்து சிறு நீர் கழித்தால் இலங்கை தாண்டுவிடும் என கூறியவர்கள் நாங்கள் படுகொலை செய்யப்படும் போது கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் எனவே இன்னும் இன்னும் இலங்கை தமிழ் மக்களை வைத்து அரசியல் குளிர்காய கூடாது

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்; இருந்திருந்தால் அதி உச்ச பாதுகாப்பு கெடுபிடிகள் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கும் ஆனபடியால் அவர் இல்லை என்ற முடிவுக்கு வரலாம் அதேநேரத்தில் எதுவும் எப்போதும் நடக்கலாம் அது ஆச்சரியப்பட வேண்டிய விடையமல்ல அதேவேளை விடுதபை;புலிகளின் தலைவர் இருக்கின்றாரா இல்லையா என்ற விடையத்தை தலைவர் ஒருவரே அறிவார்

பௌத்த பிக்குகளின் போராட்டம் காலம் காலமாக நடந்துகொள்ளும் விடையம் இதனை  அரசாங்கம் கண்டும் கண்டு கொள்ளாது இருப்பது புதிய விடையமில்லை இது ஆச்சரியப்படும் விடையமில்லை இந்த 13 திருத்தச்சட்டம் நாட்கள் செல்லச் செல்ல அதன் நிகழ்வு நடைபெறும் போது இதைவிட இன்னும் மோசமான போராட்டங்களை பௌத்த பிக்குகள் முன்னெடுப்பார்கள்.

கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற இந்த இரண்டு இராஜாங்க அமைச்சர்களான பிள்ளையானாக இருக்கட்டும் வியாழேந்திரனாக இருக்கட்டும் இவர்கள் செய்த அபிவிருத்தி வேலைகளை பார்த்தால் அவர்களுடைய வருமானம் சார்ந்த அபிவிருத்தி தான் நடக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் சார்ந்த அபிவிருத்தி கிடையாது இந்த வீதி செய்தால் எவ்வளவு தரகுபணம் கிடைக்கும் அதை செய்யால் எவ்வளவு தரகு பணம் கிடைக்கும் என்ற அவதானத்தில் இருந்தனரே தவிர பொதுமக்கள் நலன் சார்ந்து  எந்த அபிவிருத்தியையும் செய்யவில்லை.

அவர்களுக்கு எந்த எந்த திட்டத்தில் அதிக தரகு பணம் கிமைக்கின்றதே அதைத்தான் கையில் எடுத்து செய்து கொண்டிருக்கின்றனரே தவிர குறிப்பிடப்படும் அபிவிருத்தி நடை பெறவில்லை

பிள்ளையான் என்கின்ற அடையாளம் மொட்டினுடைய அடையாளம் அதாவது ராஜபக்ஷ குடும்பத்தின் அடையாளமே பிள்ளையானின் அடையாளம் இது சிறு குழந்தைக்கும் தெரியும். ஆனால் அவர் கடந்த காலத்தில் சிறையில் இருக்கும் போது  அவர்  வெளியில் வந்தால் ஏதோ தங்க மழை பெய்யும் வயலில் விளைகின்ற நெற்கதிர்கள் எல்லாம் தங்கம் தங்கமாக  கதிர்  விடும் என்ற கதை யெல்லாம் விட்டுவந்தனர்.

கடந்த முறை தேர்தலிலே நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களியுங்கள் அல்லது தமிழ் மக்கள் புலிகளுக்கு வாக்களியுங்கள் என நாங்கள் பிரச்சாரம் செய்தோம் என்ன காரணம் என்றால் அன்றைய சூழலில் நான்கு தமிழ் பிரதிநிதிகளை பெறவேண்டும் என்றதால் பிரச்சாரத்தை செய்தோம் ஆனால் அப்படி ஒரு பிழையை நாங்கள் செய்துள்ளோம் என காலப் போக்கில் அறிந்து கொண்டோம்.

பிள்ளையபன் சிறையில் இருந்து வெளியே வந்ததின் பின்பு நிறைய சரிவுள் ஏற்பட்டுள்ளது ஏன் என்றால் அண்மையில் நா. உறுப்பினர் இரா.சாணக்கின் தெரிவித்த கருத்துக்கள் இயற்கை பசளையில் அவர் செய்த தரகு பணம் ஒரு இலச்சம் வீதி அபிவிருத்தியில் இரு இராஜாங்க அமைச்சர்களும் 45 கோடி ரூபாவுக்கு மேல் தரகு பணம் பெற்றதாக வந்த செய்திகள் பிள்ளையானின் பேச்சாளர் ஆசாத் மௌலானா ஜ.நாடுகள் சபையில் கொடுத்த அறிக்கைகள் இவர்கள் இராணுவ புலனாய்வுடன் சேர்ந்து வேலை செய்வதாகவும் யாரையெல்லாம் படுகொலை செய்தார்கள்

உயிர்த ஞாயிறு குண்டு வெடிப்பில் அவர்களுக்கு சம்மந்தம் இருக்கின்றது என வாக்குமூலம் கொடுத்துள்ளார் என்ற விடயம் பரவலாக வெளிவந்துள்ளது அதைவிட இங்கு சில சில விடையங்கள் வெளிவந்துள்ளது எனவே இந்த உள்ளூராட்சி தேர்தலில் பெரிய வீழ்ச்சியை சந்திப்பார்கள் என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews