நாட்டில், ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்ரிக் பொருட்களின் பாவனை எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் தடைசெய்யப்படவுள்ளன.
பிளாஸ்ரிக் பொருட்களின் உற்பத்தி, விற்பனை, பயன்பாடு என்பன இதன் கீழ் தடை செய்யப்படவுள்ளன.
அதனடிப்படையில், ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தி அகற்றப்படும் பிளாஸ்ரிக் பொலித்தீன், பானம் அருந்தும் பிளாஸ்ரிக் ஸ்ட்ரோ மற்றும் கலக்கும் உபகரணங்கள், பிளாஸ்ரிக் மூலம் தயாரிக்கப்படும் யோகட் கரண்டி உள்ளிட்ட ஒருமுறை பயன்படுத்தி அகற்றப்படும் பீங்கான், கோப்பை, கரண்டிகள், முள்ளுக்கரண்டிகள் மற்றும் கத்திகள், பிளாஸ்ரிக் மாலைகள், பிளாஸ்ரிக் மூலம் தயாரிக்கப்பட்ட இடியப்ப தட்டுகள் தடைசெய்யப்படவுள்ளன.