
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான 50 வீத தபால் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாகவும், அரச அச்சகத்திற்கு தேவையான பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் பட்சத்தில், நான்கு நாட்களுக்குள் தபால் வாக்குச்சீட்டு அச்சிடும் பணியை நிறைவு செய்ய முடியும் எனவும் அரச அச்சகர் கங்கானி கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.
அதேவேளை, நிறுவனத்திற்கு தேவையான பாதுகாப்பு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.