வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் இடம் பெறும் சட்டவிரோத கடற்றொழில்களை உடனடியாக கட்டுப்படுத்துமாறு கோரியே குறித்த போராட்டம் இன்று காலை 9:00 மணியளவில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக அமைதியான முறையில் இடம் பெற்றது.
வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட 19 கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் பிரதி நிதிகள் கலந்து கொண்டு குறித்த போராட்டில் ஈடுபட்டனர்.
அண்மை காலமாக வடமாட்சி கிழக்கில் ஒரு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கம், மற்றும் பிற மாவட்டத்திலிருந்து வருகைதந்தும் குறித்த தொழிலில் ஈடுபடுபவதாகவும், இதனால் பிரதேசத்தில் உள்ள சிறு மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் ஆகவே அதனை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும், குறிப்பிட்டதுடன் நீரியல் வளத் திணைக்களம், கரையோர பாதுகாப்பு திணைக்களம் கடற்படை என்பன உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பதாலே குறித்த சுருக்குவலை தொழில் அதிகமாக இடம்பெற்று வருவதாகவும் இதற்க்கு குறித்த திணைக்களங்கள் துணை போவதாகவும் குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் தெரிவித்தனர் அத்துடநந் அவர்களால் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.