
நமது உழைப்பு அமைப்பின் நிதி அனுசரணையில் வலிகாமம் தென் மேற்க்கு பிரதேச சபையின் கல்லுண்டாய் இயற்கை உரம் உற்பத்தி தொழிற்சாலைக்கான முகாமைத்துவ மென்பொருள் நேற்று தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் தெற்க்கு மேற்க்கு பிரதேச சபையின் தவிசாளர் அ.ஜெபநேசன் தலமையில் மானிப்பாயில் உள்ள அதன் தலமையக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்ற குறித்த மென்பொருள் தொடக்க நிகழ்வில் நமது உழைப்பு நிறுவன நிறுவுனர் வேலுப்பிள்ளை தனபாலசிங்கம் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு குறித்த கல்லுண்டாய் இயற்கை உர உற்பத்தி தொழிற்சாலைக்கான முகாமைத்துவ மென்பொருள் வசதியை ஆரம்பித்துவைத்தார்.
இந்நிகழ்வில் வலி தென் மேற்க்கு பிரதேச சபையின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், நமது உழைப்பு அமைப்பின் பிரதிநிதிகள், மென்பொருள் உருவாக்கிய தனியார் மென்பொருள் தொழில்நுட்ப நிறுவன பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.






