
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் இந்திய இழுவை மடி படகுகளால் இரண்டு மீனவர்களுக்கு சொந்தமான 20 வலைகள் நாசமாக்கப்பட்டுள்ளன.
நேற்று இரவு 9.00 மணியளவில் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் 2 கிலோ மீற்றர் தொலைவில் உள்நுழைந்த இந்திய இழுவை மடி படகுகள் குறித்த மீனவர்களின் வலைகளை அறுத்துச் சென்றுள்ளனர்.
கடற்படை அருகில் இருந்தும் நாளாந்தம் அத்துமீறி தமது வாழ்வாதாரத்தை அழித்துச் செல்லும் இந்திய இழுவைமடி படகுகளை ஏன் இவர்களால் கைது செய்ய முடியவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்?
இந்திய இழுவைமடி படகுகளால் அறுத்துச் செல்லபதபட்ட வலைகள் சுமார் 5 இலட்சம் ரூபாவிற்க்கும் அதிகம் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்டுடன் தமக்கு நஸ்ட ஈட்டை பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.
எங்களுடைய வாழ்க்கையை அழித்தொழிக்கும் இந்திய மீனவர்களின் அத்துமீறலை இலங்கை அரசாங்கம் தடுத்து நிறுத்தாவிடில் தற்கொலை செய்யும் நிலைக்கு தாம் தள்ளப்படக்கூடிய சூழ்நிலை உருவாகும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
கடற்றொழில் சம்பந்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கடற்படை மற்றும் நீரியல்வளதிணைக்களம் தயக்கம் காட்டுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.






