
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பூனைத்தொடுவாய் கடலில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை கடலில் வைத்து 1994 ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 10. பேரின் 29 வது நினைவேந்தல் இன்று வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் நினைவேந்தல் இடம் பெற்றது.
கட்டைக்காடு சென்மேரிஸ்விளையாட்டுக் கழக தலைவர் தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் , சென்மேரிஸ் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அத்துடன் ஆழியவளை அருணோதயா விளையாட்டு கழகத்திற்கும், கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகத்திற்கும் இடையில் சினேகபூர்வ விளையாட்டும் இடம்பெற்றது. பங்குபற்றிய வீரர்களுக்கு பணப்பரிசில்களும் வளங்கிவைக்கப்பட்டது.








