தலைவர் பிரபாகரன் தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கும் போது நான் இல்லா காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சின்னா பின்னாமாகிவிடும் எங்களது போராளிகள்தான் தமிழ் மக்களுக்கு உரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என அவரது இதயத்திலும் மாவீரர்களது இலட்சியத்திலும் இருந்தது எனவே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் எங்கள் கட்சிதான் என புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சிதான்;;; கட்சி தலைவர் கே. இன்பராசா தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி நிர்வாக தெரிவுக் கூட்டம் இன்று சனிக்கிழமை (18) காரைதீவில் இடம்பெற்றது இதில் கட்சியின் அம்பாறைமாவட்ட இணைப்பாளராக காரைதீவைச் சேர்ந்த செல்வநாயகம் ரசீகரன் நியமிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்
இன விடுதலைக்காக தேசிய தலைவருடன் ஆயுதம் ஏந்தி போராடும் போது தமிழீழம் என்ற கோரிக்கைக்கா போரடினோம் தமிழீழம் என்பதை தேசிய தலைவர் எப்போது முன்வைத்தாரே 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாவீரர்களையும் 3 இலச்சத்துக்கு மேற்பட்ட மக்களையும் இழந்துள்ளோம் தமிழீழம் என்பது இன்னும் எமது மனதில் உள்ளது
இந்த 13 வது திருத்த சட்டத்தை நாங்கள் ஏற்றுகொள்வதா? இல்லையா? என்றதுக்கு அப்பால் இதில் பொலிஸ் காணி அதிகாரங்கள் இல்லாத இந்த சட்டத்தை இலங்கை மற்றும் இந்;திய அரசும் எடுத்துள்ளதுடன் தற்போது இந்தியாவுக்கு உள்ள நெருக்கடி காரணமாக தமிழ் மக்களின் தீர்வு 13 திருத்தச்சட்டம் என ஒரு நாடகம் பொய்பிரச்சாரம் செய்து கொணடிருக்கின்றனர்.
காணி பொலிஸ் அதிகாரம் உள்ள 13 திருத்தச்சட்டம் வருமாக இருந்தால் அப்போது என்ன செயய் போகின்றோம் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் hறே 2002 ம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டு கொண்டிருக்கும் அமைப்புக்களை ஒன்று சேர்த்து அரசியல்கட்டமைப்பை உருவாக்கி அரசியல் ரீதியாக தமிழர்களுடைய ஏக பிரதிநிதிகளாக விடுதலைப் புலிகளின் அரசியல் செயற்பாட்டினை வழிநடத்தவேண்டும் என தலைவர் தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கினார்.
அப்போது நான் இருக்கும் மட்டுமதான் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு பயபக்தியில் இயங்கும் நான் இல்லா காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சின்னா பின்னாமாகிவிடும் என்று சொன்னது போல இன்று சின்னா பின்னமாகியுள்ளது
நா.உறுப்பினர் எம்..சுமந்திரன் விடுகின்ற தவறை பங்காளி கட்சிகளான புளொட் ரெலோ இதுவரைக்கும் தட்டிக் கேட்டார்களா? இல்லை இன்று எம்.சுமந்திரன் தனது சாணக்கியத்தால் ரணிலை சந்தித்தார் அவர் போட்ட திட்டப்படி இரு கட்சிகளையும் வெளியில் விட்டார் அவரின் நிகழ்சி நிரல் மட்டும்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பில் நடந்தது
இந்த நிலையில் ரெலோ புளொட் தனித்துவமாக இயங்கமுடியாது ஏன் என்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடையாளத்தால் மக்கள் அவர்களுக்கு வாக்களித்தனர்.
அந்த அடையாளத்தை பேணவேண்டும் என்றால் மீண்டும் மக்கள் ஆதரவே இல்லாத சுரேஷ;பிரேமச்சந்திரான் மற்றும் இருகட்சிகளை குத்துவிளக்குகள் கொண்டுவந்து தாங்கள் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்கின்றனர்
இன்று தமிழ் மக்களுக்காக ஒரு ஏக பிரதிநிதி இல்லாத பட்சத்தில் இன்று தமிழரசு கட்சி என்றதை கொண்டுவந்து இன்று எங்களுக்கு என்று பிரதிநிதித்துவமான கட்சி இல்லாத நிலைக்கு தமிழரசு கட்சி ஆக்கி இருக்கின்றது
அப்போது தலைவர் கூறியதுபோல போராளிகளான நாங்கள் புற்றுயிர் பெற்று ஜனநாயக ரீதியாக மக்களுடைய எக பிரதிநிதிகள மக்களின் ஆணையுடன் சுயநிர்ணய உரிமையை பெற்றுக் கொடுப்போம் என்றார்.