உள்ளூராட்சி தேர்தலினால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் இல்லை எனவே 13 திருத்தசட்டம் அரசியல் யாப்பில் உள்ள சட்டம் அதனை ரணில் நிச்சயமாக நடைமுறைப்படுத்துவார் அதற்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் அதற்கு தேர்தலை நடாத்தி உரிய தலைவர்களிம் ஒப்படைக்க வேண்டும் இது தான் தமிழ் மக்களுக்கு நன்மைபயக்கும் என அகில இலங்கை தமிழர் மகாசபை கட்சியின் தலைவர் கலாநிதி கே.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்லடியில்; இன்று ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
உள்ளூராட்சி தேர்தல்பற்றி இப்போது பெரிய சர்ச்சை எற்பட்டுள்ளது தேர்தல் நடாத்தவேண்டுமா? வேண்டாமா? என இந்த உள்ளூராட்சி தேர்தலினால் ஏதாவது ஒரு பொருளாதார அபிவிருத்திவருமா? இல்லை ஆனால் மாகாணசபையை பற்றி மறந்தே விட்டார்கள் மாகாணசபை தேர்தல் கடசியாக 2014 நடந்தது இதன்பிறகு தேர்தலைப்பற்றி எந்த கதையும் இல்லை
இந்த மாகாண சபையை மறந்துவிடுவதுதான் இவர்களின் நோக்கமாக இருக்கின்றது எனவே உள்ளூராட்சி தேர்தலை வைத்து திசைதிருப்பவேண்டாம். தற்போது தமிழ் மக்களுக்கு தேவை மாகாணசபைகளை உயிர்ப்பிக்க வேண்டும் மீண்டும் அதனை செயற்படுத்தவேண்டும் .
13 திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆரம்ப கட்டமாக முதலில் வடகிழக்கில் மாகாணசபையை வைத்திருந்த காலப்பகுதியில் இருந்த பாடசாலைகளை மத்திய அரசில் இருந்து அவற்றை உடனடியாக திருப்பி கொடுக்கவேண்டும் அதேபோல வைத்தியசாலைகள், திருப்பி கொடுக்க வேண்டும்.
அதேபோல மாகாணங்களுக்குரிதாக இருந்த கமலநல சேவையை மத்திய அரசு பிடுங்கிஎடுத்தபோது அது மாகாணங்களுக்கு உரியது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது அதனையடுத்து கமலநல சேவை என்ற பெயரை கமநல அபிவிருத்தி சேவை என பெயரை மாற்றி வைத்திருக்கின்றனர் இதனை எல்லாம் மாகாணசபைக்கு மாற்றி கொடுக்கவேண்டும்.
இவற்றை தவிர மாகாண சபைக்குள் தான் மாவட்டம் வரவேண்டும் அதைவிடுத்து மாவட்டங்களை மத்திய அரசாங்கம் கண்காணித்து கொண்டு மாகாணசபைக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்றால் அது அதிகார பகிர்வாக இருக்க முடியாது எனவே அனைத்து கச்சேரிகளையும் மாகாணங்களின் கீழ் கொண்டுவந்து 13 திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படத்த வேண்டும்
30 வருடங்களுக்கு முன்னர் அப்போது வடகிழக்கு மாகாணசபை உருவாக்கிய போது மறைந்த ஜனாதிபதி பிரேமதாஸா தான் இதை முழுமையக நடைமுறைப்படுத்துவேன் என உறுதியளித்தார் விடுதலைப் புலிகள் ஆரம்பித்த யுத்தம் இவற்றை செய்ய முடியாது போனது.
இந்த நிலையில் சந்திரக்கா ஜனாதிபதியானவுடன் 13 வது போதாது எனவே சமஷ;டியை கொடுத்தால் யுத்தத்தை நிறுத்தலாம் என 2000 ம் ஆண்டு சமஷ;டி யாப்பை பாராளுமன்றத்திற்கு கொண்டுவந்தார் அதனை எதிர்;த்தவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணி, அதேபோல ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இருந்த ஜ.தே.கட்சி அதனால் அதனை நடைமுறைக்கு கொண்டுவரவில்லை
ரணிலின் கொள்கை 13 திருத்தச்சட்டம் 2005 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ரணில் வந்தால் 13 திருத்த சட்டத்தை அமுல்படுத்துவார் எனவே அதன் பலனை தமிழ் மக்கள் அனுபவிப்பார்கள் என்றால் அவர்கள் தனிநாட்டை மறந்துவிடுவர்கள் என்பதற்காக அவருக்கு எதிராக தமிழ் மக்கள் வாக்களித்தனர்.
இது காலவரைக்கும் 13 திருத்தசட்டம் நடைமுறைப்படுத்தாதால் தமிழர்களுக்கு பல தீமைகள் ஏற்பட்டுள்ளது ஒன்று இந்த திருத்த சட்டத்தை நிறுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட யுத்ததினால் 13 திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் போன்து , வடக்கு கிழக்கு இணைப்பு இல்லாமல் போனது , வடக்கு கிழக்கில் இருந்து 15 இலச்சம் தமிழ் மக்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர் இதனால் எமது சனத் தொகை குறைவடைந்துள்ளதுடன் 15 பாராளுமன்ற உறுப்பினர் பிரதிநிதித்துவம் இல்லாமல் போயுள்ளது.
இதேவேளை இன்னும் ஒர் இருவருடத்தில் இருக்கின்ற அதிகமான தமிழ் மக்கள் நாட்டை விட்டு வெளியேறினால் தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இன்னும் குறையும் எனவே இவற்றை எல்லாம் பாராளுமன்றத்தில் இருக்கும் எமது பிரதிநிதிகள் சிந்திப்பதில்லை இவர்கள் தலைமைத்துவத்துக்கு அருகதையற்ற வர்கள், அதனால் நாங்கள் இந்த நிலைக்கு வந்துள்ளோம்.
எனவே உடனடியாக 13 திருத்தச்சட்டத்தை அமுல்படுத்த ஒத்துழைப்பு வழங்குவதோடு மட்டுமல்லாது விடயம் விளங்கியவர்கள் படித்தவர்கள் 13 திருத்த சட்டம் என்றால் என்ன என்பதை அறிந்து கொண்டவர்கள் தான் தமிழ் மக்களின் பாராளுமன்றத்தை பிரதிநிதிபடுத்தபடவேண்டும்மே ஒழிய கண்ட காத்தான் கூத்தானை அனுப்ப கூடாது என்றார்.