
பேருந்தின் மீது புகையிரதம் மோதியதில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து இன்று காலை 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி அறிவியல் நகர் புகையிரத நிலையத்திற்கு அண்மையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு ஊழியர்களை ஏற்றி பயணித்த அரச பேருந்து, புதையிரத கடவையை கடக்க முற்பட்டபோது, யாழ்ப்பாணத்திலிருந்து முறிகண்டி நோக்கி பயணித்த யாழ் ராணி புகையிரதம் மோதியுள்ளது.
குறித்த விபத்தில் காயமடைந்த மூவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.







