பயணத் தடையிலும் யாழ்நகரில் அதிகளவில் மக்கள் நடமாட்டம் காணப்படுகிறது
நாடு பூராகவும் அதிகரித்துள்ள கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் முகமாக அரசினால் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண நகரில் மக்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகின்றது
குறிப்பாக நேற்றையதினம் யாழ்ப்பாண மாவட்டத்தில் 375 பேருக்கு மேற்பட்டோர் கொரோனா தொற்றாளர்களாக இனங் காணப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய தேவை தவிர்ந்த ஏனையோர் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளனர். எனினும் அவ்வாறான அறிவுறுத்தல்களையும் மீறி
பொதுமக்கள் தற்பொழுது வீதிகளில் வழமை போல நடமாடி வருவதை அவதானிக்கக் கூடியதாக வுள்ளது
அத்தியாவசிய தேவை தவிர்ந்த ஏனையோரும் வீதிகளில் தற்பொழுது சுதந்திரமாக நடமாடுவதை அவதானிக்க கூடியதாகவுள்ளது
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த மாதம் பயணத் தடை அமுல் படுத்தப்பட்ட நாளிலிருந்து இன்றைய தினம் வரை 2000 பேர் தொற்றாளர்களாக இனங் காணப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் பயணத்தடை கட்டுப்பாடுகளை பொருட்படுத்தாது பொறுப்பற்ற விதத்தில் வழமைபோன்று வீதிகளில் நடமாடுவதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது