
யாழ். கோண்டாவில் பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் கலந்த பாக்கு விற்பனையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் நேற்று கோப்பாய் குற்றத்தடுப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோண்டாவில் பகுதியில் பாடசாலை மாணவர்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் கலந்த பாக்கு விற்பனை செய்யப்படுவதாக கோப்பாய் குற்றத்தடுப்பு பொலிசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இந்நிலையில் குறித்த பகுதியை நோட்டமிட்ட விசேட குற்றத் தடுப்பு பிரிவினர் போதைப் பொருள் கலந்த பாக்குடன் நபர் ஒருவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் 750 கிராம் போதை கலந்த பாக்கு காணப்பட்டதுடன் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை கோப்பாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.