
அடுத்த வருடம் தேர்தல் நடத்தப்படும் என்று ஜனாதிபதி அறிவித்திருந்தால் அதற்காக வருந்துவதாகவும் தேர்தலை நடத்துவதற்கான தீர்மானத்தை தேர்தல் ஆணைக்குழுவே எடுக்க வேண்டும் என்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தேர்தலை நடத்துவது தொடர்பிலான அதிகாரத்தை கொண்டுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளில தலையிடுவதற்கு ஜனாதிபதிக்கோ அல்லது வேறு எந்த நபருக்கோ எவ்வித அதிகாரமும் கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.