
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்மடுநகர் பகுதியில் இன்று அதிகாலை காட்டு யானை நுழைந்து மக்களை அச்சுறுத்தியுள்ளது.
அதிகாலை குறித்த பிரதேசத்தில் உள்ள குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை மக்களின் வாழ்வாதாரத்தை அழித்துள்ளது. இதேவேளை, குறித்த யானையை துரத்த சென்ற மக்களை அச்சுறுத்தியுள்ளதுடன். வீட்டினையும் சேதப்படுத்தியுள் ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவிக்கின்றார்.
குறித்த பகுதியில் தொடர்ச்சியாக மக்கள் காட்டு யானையின் அச்சுறுத்தலிற்கு முகம் கொடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

