கிளிநொச்சி அக்கராயன் குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டு வரும் நன்னீர் மீன்பிடித் தொழிலாளர்கள் தொழில் நடவடிக்கைகளில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர்
கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன் குளத்தில் உள்ள 4000 ஏக்கர் வரையான நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொண்டு வரும் அதே நேரம் 46 வரையான நன்னீர் மீன்பிடி தொழிலாளர்கள் நன்னீர் மீன்பிடியை நம்பி வாழ்ந்து வருகின்றனர்
இந்த நன்னீர் மீன்பிடித் தொழிலாளர்கள் தற்போது பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
அதாவது முதலைகளின் பெருக்கம் மற்றும் குளத்தின் உட்பகுதியில் காணப்படுகின்ற மரக்கட்டைகள் மற்றும் காற்று காரணமாக நாளாந்தம் தமது மீன்பிடி வலைகள் சேதமடைந்து வருகின்றன என்றும் குறிப்பிட்டதுடன் கூடுதலான தொழிலாளர்கள் நுண் கடன் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் என்பவற்றில் கடன்களை பெற்று தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்
ஆனால் அதற்குரிய வருமானம் கிடைப்பதில்லை என்றும் தற்போது ஒரு கிலோ அல்லது இரண்டு கிலோ மீன் மட்டுமே பிடிக்கப்படுகின்றன. இதன் மூலம் 300 ரூபாய்க்கும் குறைந்த அளவு வருமானம் கிடைக்கப் பெறுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போதைய கொவிட் -19 மற்றும் ஊரடங்கு சட்டம் காரணமாகவும் அரிசி சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாகவும் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர் எனவே தமக்கான நிவாரண உதவிகளை பெற்று தருமாறு கோரியுள்ளனர்