
பருத்தித்துறை பொலீஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மோப்ப நாயுதவியுடன் தொடர் போதை பொருள் தேடுதல் தேடுதல் நடவடிக்கைகள் அண்மை நாட்களாக இடம் பெற்று வருகின்றது.
போதை பொருள் விற்பனையாகலாம என சந்தேகிக்கப்படும் இடங்களில் திடீரென. மோப்ப நாயுடன் சென்ற அனைத்து இடங்களும் சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றன.
பருத்தித்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமை பொலீஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலமையிலான. பொலீஸ் குழுவினராலேயே குறித்த தேடுதல் இடம் பெறுகிறது.




