
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கையர்களால் தாக்குதலிற்க்கி உள்ளாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தாக்குதலில் படுகாயமடைந்த ஐந்து மீனவர்கள் தமிழதநாடு பொறையார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 21ம்தேதி இரவு அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் ,அருண் குமார் ,மாதவன் ,கார்த்தி ,முருகன் மற்றும் படகின் உரிமையாளர் உள்ளிட்டோர் கடலுக்கு மீன் பிடிக்க சென்று உள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை காரைக்கால் தென்கிழக்கு 44 நாட்டிகல் மயில் தொலைவில் கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கையர்கள் குறித்த இந்திய மீனவர்களின் வலைகளை பறித்துக் கொண்டதுடன் இரும்பு பைப்பால் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இதில் ஐந்து மீனவர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். ஒரு மீனவருக்கு லேசான எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது.
இன்று கரை திரும்பிய மீனவர்கள் தரங்கம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை மேற்கொண்ட பின்பு மேலதிக சிகிச்சைக்காக பொறையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இலங்கையர்கள் படகில் இருந்த வெளியிணைப்பு இயந்திரத்தை பறித்துக் கொண்டு தங்களை கொடூரமாக தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
படுகாயம் அடைந்த ஐந்து மீனவர்களுக்கு பொறையார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இது தொடர்பாக மீன்வளத்துறையினர் மற்றும் கடலோர காவல் குழும போலீசாரிடம் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் மீனவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தமிழ்நாடு மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

