
வட மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு இன்று காலை 8.30 மணியளவில் வட மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் இ.இரவீந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது புதிதாக நிர்மானிக்கப்பட்ட குறித்த கட்டடத்திற்கான பூஜை இடம்பெற்றதுடன், சம்பிரதாய நிகழ்வுகளும் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், கரைச்சி பிரதேச செயலாளர் பா.ஜெயகரன், வட மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பொது முகாமையாளரும் வடமாகாண திரைசேரியின் பிரதம கணக்காளருமான ஜெயராஜா, உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் பற்றிக் நிரஞ்சன், உத்தியோகத்தர்கள், தனியார் பேருந்து சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அடுத்த மாதம் முதல் வட மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் மாகாண ரீதியான சேவைகள் குறித்த ஆலவலகத்திலிருந்து இடம்பெறவுள்ளது. குறித்த அலுவலகத்தின் சேவைகளை பொதுமக்களும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், மறைப்பாடுகளையும் தெரிவிக்க முடியும் என அதன் தலைவைர் தெரிவித்தார்.


