அனுராதபுரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் 4,000 பேர் வீடுகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்று, அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அனுராதபுர மாவட்டச் செயலாளர் வைத்தியர் ரசிக்க இந்திக்க அம்பேபொல தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில், கொரோனா சிகிச்சைக்காக இரண்டு விடுதிப் பிரிவுகளும் அரைவாசி விடுதிகள் ஏழும் மெத்சிறி செவனா கொரோனா சிகிச்சை மய்யத்தில் 12 தீவிர சிகிச்சை கட்டில்களும் 37 உயர் பராமரிப்பு கட்டில்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் போது தினமும் வைத்தியர்கள் உள்ளிட்ட 10 பேர் தினமும் தொற்றுக்கு உள்ளாகுகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்