
ஐக்கிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பு கிளிநொச்சி நகரில் இன்று இடம்பெற்றது. குறித்த மக்கள் சந்திப்பு இன்று பிற்பகல் 1 மணியளவில் கிளிநொச்சி நகரில் உள்ள தனியார் விருந்தினர் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது, கரைச்சி , பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலிரு்நது மக்கள் வருகை தந்திருந்தனர். இதன்போது மக்களால் அமோக வரவேற்பளிக்கப்பட்டது. குறித்த சந்திப்பானது ஐக்கிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் எம் மரியசீலன் தலைமையில் ஆரம்பமானது.
நிகழ்வில், எரிக்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ, உமாசந்திரா பிரகாஸ், கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் எம் மரியசீலன்பிரதேச அமைப்பாளர்கள், வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.







