இஸ்ரேல் நாட்டில் தாதி வேலை பெற்றுக் கொடுப்பதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டுவந்த ஏஜென்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரச இலட்சினை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் போலி முத்திரைகளுடன் தயாரிக்கப்பட்ட போலி விண்ணப்பங்களை வழங்கி
இளைஞர்களை தவறாக வழிநடத்தி பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் ஒருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் பத்தரமுல்ல – தியத்த உயன வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்,
குறித்த சந்தேகநபர் கட்டணமாக ஒருவரிடமிருந்து தலா 4 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
குளியாபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது தெரியவந்த தகவலின் அடிப்படையில் அத்துரிகிரிய பிரதேசத்தை சேர்ந்த மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டதாக
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது