
அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வீ.சுப்பிரமணியம், மற்றும் ஏற்பாட்டாளர் அன்ரனி ஜேசுதாசன் ஆகியோர் தீவிர முயற்சியில் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக மனிதநேயத்தோடும், அர்ப்பணிப்போடும், தமது கடமைகளை வகைப் பொறுப்போடு முன்னெடுத்துக் கொண்டிருக்கும் வடக்கு மாகாண களப்பணி ஊடகவியலாளர்களே யாழ்ப்பாணத்தில் தனியார் விருந்தினர் விடுயொன்றில் கௌரவிக்கப்பட்டனர்.
அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் சுப்பிரமணியம் அவர்களின் தலமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் வட மாகாணத்தில் நீண்ட காலமாக நேரகாலம் பாராது களப்பணியில் ஈடுபடும் மூத்த ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபன் உட்பட 18 தமிழ் ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.