வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் 371000 ரூபா பெறுமதியான துவிச்சக்கர வண்டிகளும், 100,000 ரூபா நிதியும் நேற்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
வாராந்தம் உதவி வழங்கும் நிகழ்வு நேற்று 24/02/2023 இடம் பெற்றது. இதில் 07 மாணவர்களிற்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டதுடன் ஆலயம் மற்றும் நடனப் போட்டிகளுக்கு நிதி உதவிகளும் வழங்கப்பட்டன.
மிருசுவில் – பத்திரகாளி அம்மன் ஆலயத்துக்கு 3ம் கட்டமாக விக்கிரகங்கள் கொள்வனவுக்காக ரூபா ஐம்பதாயிரம் நிதி ஆலய நிர்வாக சபையினரிடம் வழங்கப்பட்டது.
கிளிநொச்சி – தமிழ் சங்கத்தின் அனுசரனையில் இடம்பெறும் நடனமயில் போட்டி நிகழ்வுக்காக 2ம் கட்டமாக ரூபா 50,000 நிதியும் வழங்கப்பட்டது.
அதே வேளை யா/ தொண்டைமானாறு வீரகத்தி மகாவித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்கும் கெருடாவில் பிரதேசத்தை சேர்ந்த மாணவி ஒருவருக்கும்
யா/புத்தூர் ஶ்ரீ சோமஸ்கந்த கல்லூரியில் தரம் 06, தரம் 10, உயர்தரம் என்பனவற்றில் கல்வி கற்கும் கலைமதி வீதி, புத்தூர் மேற்கு பிரதேசத்தை சேர்ந்த 3 மாணவர்களிற்கும்,
யா/ கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் கல்வி கற்கும் புலமை பரீட்சையில் சித்தியடைந்த இரண்டு மாணவர்களுக்கும்,
யா/ மத்திய கல்லூரியில் உயர்தரம் கற்கும் சிறுப்பிட்டி மேற்கு பிரதேசத்தை சேர்ந்த மாணவனுக்குமே துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.
இதில் கௌரவ கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள், ஆச்சிரம தொண்டர்கள், பக்கர்கள் நலன்விரும்பிகள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.