உள்ளூராட்சி சபைத் தேர்தல் திட்டமிட்டபடி எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் நாள் நடத்தப்படாமை தொடர்பில் அனைத்துலக சமூகத்துக்கு அறிவிக்கவுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் அறிவித்துள்ளன.
தேர்தல் பிற்போடப்பட்டதன் காரணமாக வேட்புமனுக்களை சமர்ப்பித்த 80,000 இற்கும் அதிகமான வேட்பாளர்கள் பாரிய அநீதிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தேர்தலை ஒத்திவைத்தமைக்கு எதிராக மீண்டும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
மக்களின் வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்துவதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அதன் நிறைவேற்றுப்பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.