ரணில் விக்ரமசிங்கதன்னுடைய அடி மனதில் இருக்கின்ற அந்த பயங்கரவாத தோற்றத்தை வெளிக்காட்டி மக்களின் உரிமைகளை தடுத்து வருவது மிக மோசமானது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையில் இன்று இடம்பெறுகின்ற நிழ்வுகளிற்கு இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கதான் முதன்மை காரணராக இருக்கின்றார். குறிப்பாக 94ம் ஆண்டுகளில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை யாழ் மாவட்டத்திற்கானதை தீவகத்திற்கு
அதற்கு பிற்பாடு வந்த சந்திரிக்கா அவர்கள், வவுனியாவில் கொத்தனி வாக்குகள் மூலம் அத்தேர்தலை நடத்தியிருந்தார். ஆனால், தன்னை ஒரு ஜனநாயகவாதியாக இந்த உலகம் முழுவதும் காட்டிக்கொண்டிருக்கின்ற இன்றைய நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க [dehaf சர்வாதிகாரியாக செயற்படுவதை நாங்கள் இன்று அவதானிக்கின்றோம்.
மிக முக்கியமாக பாராளுமன்றத்தில் ஒரு கோமாளிகளின் தலைவனாகவும், வெளியிலே ஜனநாயக சர்வாதியாகவும் தன்னுடைய அராயகதனத்தை வெளிப்படையாக வெளிப்படுத்தி வருவதை அவதானிக்க முடிகின்றது. காணவும்கூடியதாக இருக்கின்றது.
காரணம், மக்கள் விடுதலை முன்னணியினால் முன்னெடுக்கப்படுகின்ற மக்கள் போராட்டங்களையும் மக்கள் எழுச்சி போராட்டங்களையும் நசுக்குவதற்காக இடைக்கால தடை உத்தரவுகளை பிறப்பிப்பதன் மூலமு ம், நீதிமன்ற தடை உத்தரவுகளை பிறப்பிப்பதன் மூலமு ம் நாட்டிலே பேசுகின்ற உரிமையையும், நாட்டிலே போராடுகின்ற உரிமையையும், ஒன்றுகூடுகின்ற உரிமையையும் இந்த நாட்டின் ஜனாதிபதி லிபரல்வாதியென்றெல்லாம் பேரெடு த்த அவர் தன்னுடைய அடி மனதில் இருக்கின்ற அந்த பயங்கரவாத தோற்றத்தை வெளிக்காட்டி அவற்றை தடுத்து வருவது மிக மோசமானது.
இந்த நாட்டின் ஜனநாயகம் ஒரு ஜனநாயகவாதியால் குழிதோண்டி புதைக்கப்படுகின்றது. ஒரு யுத்தம் இல்லாத காலத்தில் சத்தமில்லாமலே இந்த நாட்டின் சிங்கள மக்கள் மிகப்பெரிய அடிமைத்தனத்துக்குள் தள்ளப்படு கின்றார்கள். தற்பொழுது சிங்கள மக்கள் உணர தொடங்கியிருக்கிறார்கள் என்று நான் நிலைக்கின்றேன்.
எவ்வாறு இந்த நாட்டில் நீடித்து நிலைத்திருக்கின்ற இன ரீதியான அரசியல் பிரச்சினைக்கு தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கும் ஒரு தீர்வை முன்வைத்து எவ்வாறு இந்த நாட்டை கொண்டு செல்லலாம் என்று அவர்கள் சிந்திக்கின்ற காலத்தில் இந்த நாட்டை ஒரு பிளயத்துக்குள் ஏதாவது ஒரு பிரச்சினைக்குள் தள்ளி அதை தீர்க்க முடியாதவாறு குழப்புகின்ற நடவடிக்கைகளை தனது வழமையான ஐம்பது வருட அரசியலில் எவ்வாறு கடைப்பிடித்தாரோ, தொடர்ந்தும் ரணில் விக்ரமசிங்க அந்த யுக்தியையும், தந்திரத்தையும் கையாண்டு இந்த நாட்டை மேலும் மேலும் கீழ் நிலைக்கு கொண்டு செல்கின்ற கைங்கரியத்தையே ஆற்றி வருகின்றார்.