அரசின் நியாயமற்ற வரிச்சுமையை உடன் நீக்குமாறு கோரி இலங்கை வங்கி ஊழியர் சங்கம் மற்றும் தொழில்சங்கங்கள் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று புதன்கிழமை (1) மாபெரும் கவனயீர்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடளாவிய ரீதியில் வங்கிகள் மற்று அரச திணைக்கள சங்கங்கள் ஒன்றிணைந்து நியாயமற்ற வரிச்சுமையை உடன் நீக்குமாறு கோரி இலங்கை வங்கி ஊழியர் சங்க தலைவர் பிறேம்குமார் தலைமையில் இன்று புதன்கிழமை (01) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இலங்கை வங்கி ஊழியர் சங்கம, கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், வைத்தியர் சங்கம் உட்பட தொழில் சங்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டோர் ஒன்றிணைந்தனர்
இதன்போது வானுயரும் பணவீக்கம் தொழில் வல்லுநர்கள் நடுவீதியில், நண்பர்களுக்கு வரிச்சலுகை தொழில் வல்லுநர்களுக்கு வரிச்சுமை, தொழில்வல்லுநர்களை சுரண்டிதிண்ணும் வரி யோசனையை மீளப்பெறு, வங்கிதிருடன்கள் பெரும் பதவிகளில் அவர்களை சுற்றி வரிதிருடர்கள், உணவில்லை நீரில்லை குடித்திட இங்கே மருந்துமில்லை அந்த கவலை அவர்களுக்கில்லை, மக்கள் மீது வரிச்சுமை அவர்களுக்கோ சொகுசு வாழ்க்கை,
எல்லா புறமும் ஊழல் மோசடி இன்னமும் அவர்கள் மாடங்களில் போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு சுமார் ஒருமணித்தியாலம் ஆர்பாட்டத்தில் ஈடு;பட்ட பின்னர் ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.