
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனை நோக்காகக் கொண்டு வடக்கு மாகாண விவசாய அமைச்சின் நலன்புரிச் சங்கத்தால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் இரத்ததான நிகழ்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது.
வடக்கு மாகாண விவசாய அமைச்சின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற குறித்த இரத்ததான நிகழ்வில் விவசாய அமைச்சு மற்றும் யாழ் மாவட்டத்திலுள்ள ஏனைய திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் நலன்விரும்பிகள் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கினர்.