
திருகோணமலை மாவட்டம் செல்வநாயகபுரம் பிரதேசத்தில் உள்ள உதயபுரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்துக்குமாரசுவாமி அறநெறிப் பாடசாலை கட்டிட பணிக்காக முதலாம் இரண்டாம் கட்டமாக தலா 50000 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் 3ம் கட்டமாக ரூபா 50,000 நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதே வேளை அறநெறிப் பாடசாலை – ஆசிரியர்கள் மூவருக்கு மாசி மாதத்திற்கான கொடுப்பனவாக ரூபா 30000 மும் மாணவர்களின் சத்துணவுக்காக 15000 ரூபாவும் வழங்கப்பட்டது.
மேலும் திருகோணமலை – மூதூர் வெருகல் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தி/மூ/வெருகலம்பதி இந்து மகா வித்தியாலயத்திற்கு அருள்மிகு சரஸ்வதி ஆலயம் அமைப்பதற்கான 1 ம் கட்ட நிதி உதவியாக 100,000 ரூபா பாடசாலை முதல்வரிடம் வழங்கப்பட்டது.
இவ் செயற்றிட்ட உதவிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கௌரவ கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் நேரடியாகச் சென்று வழங்கி வைத்ததுடன் இவ் உதவித்திட்ட நிகழ்வுகளில் ஆச்சிரம தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் முல்லைத்தீவு மாவட்டம் பனிக்கன்குளம் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட குடும்பம் ஒன்றிற்க்கு அவர்களின் வீட்டினை புனரமைப்பதற்க்காக ரூபா 50000/- மும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.




