
முகமாலை பகுதியில் வீதியில் காணப்படும் பம்மிங்கால் வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து நேற்று பிற்பகல் 6 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
வீதியானது பொருமல் நிலையில் பம்மிங் போன்று காணப்படுகிறது.இதனால் தினம் தினம் குறித்த பம்மிங்கில் விபத்து இடம் பெற்றுவருவதாகவும் இதனை சீர் செய்ய வீதி அபிவிருத்தி அதிகார சபை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவ பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.




