
முல்லைத்தீவு சாலை பேருந்து மற்றும் கிளிநொச்சி தனியார் பேருந்து சேவைகள் வார நாட்களில் காலை 6.30 மணிக்கு சேவையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டமையை கண்டித்து இன்றைய தினம் கிளிநொச்சி பேருந்து சாலையினர் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இன்று காலை முதல் நண்பகல்வரை அனைத்து சேவைகளையும் சாலையில் முடக்கி குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை தமது சாலை பேருந்து சேவை இடம்பெறும் நேரத்தில் விசுவமடுவிலிரு்நது திருகோணமலை நோக்கிய மற்றுமொரு சேவையும் முல்லைத்தீவு சாலையினரால் மேற்கொள்ளப்படுவதாகவும் அதனால் தமது சாலையின் சேவையில் பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில் முல்லைத்தீவு அரச பேருந்து சாலையினால் முன்னெடுக்கப்பட்ட சேவையை இடைநிறுத்துவதாக இலங்கை அரச பேருந்து சேவையின் வட பிராந்திய முகாமையாளர் விஜித தர்மசேன வாக்குறுதி அளித்த நிலையில் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.


