வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிடம் காணாமல் போனோர் அலுவலகத்தினால் திரட்டப்பட்டு வரும் நிலையில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் எதிர்ப்பினை வெளியிடுகின்றனர்.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விடயங்களை திரட்டும் பணிகள் OMP அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலலையில், குறித்த அலுவலகத்திற்கு தகவல்களை வழங்க வேண்டாம் எனவு்ம, அது அரசாங்கத்தினை பாதுகாக்கவும், சர்வதேசத்தை ஏமாற்றவும் அமைக்கப்பட்ட அலுவலகம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தினால் குறிப்பிடப்பட்டு வருகின்றது.
இந்த நிலயைில், கிளிநொச்சியில் அமைந்துள்ள OMP அலுவலகத்தில் நீதி அமைச்சர் முன்னிலையில் விபரங்கள் திரட்ட முற்பட்டபோது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
இந்த நிலயைில் இன்றைய தினம் கரைச்சி பிரதேச செயலகத்தில் விபரங்கள் சேகரிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலயைில், குறித்த விபர திரட்டல் தொடர்பில் அதிர்ப்தியினை வெளியிட்ட கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க தலைவி கதிர்காமநாதன் கோகிலவாணி ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில்,
OMP அலுவலகத்தினால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விபரங்களை திரட்டும் பணி பிரதேச செயலகத்தில் இரண்டு நாட்களாக முன்னெடுக்கப்படுவதாக அறிகிறோம். உண்மையில் OMP அலுவலகத்தில் எமக்கு நன்றை இல்லை எனவும், அவர்களால் நீதி கிடைக்க போவதில்லை எனவும் எம்முடன் போராடும் பெற்றோருக்கு விளக்கி வருகின்றோம்.
இந்த நிலையில், கிளிநொச்சி அலுவலகத்திற்கு அழைத்தால் எமது உறவுகள் செல்வதில்லை என்பதற்காக கிராம சேவையாளர்கள் மூடாக தொலைபேசி மூலம் அழைத்து விபரங்களை திரட்டுகின்றனர். கிராம சேவையாளருக்கு அஞ்சி சிலர் அங்கு சென்று பதிவுகளை மேற்கொள்கின்றனர்.
ஆனால். அதற்கு எமது உறவுகள் ஏமார்ந்து செல்ல வேண்டாம். அவர்களால் குறிப்பிட்ட தொகை காசு கொடுப்பதாக கூறுகின்றனர். நாங்கள் அந்த காசுக்காக போராடவில்லை. எமது பிள்ளைகளிற்கு நீதி கோரியே போராடுகின்றோம். அவ்வாறு காசு கொடுக்கவும் இல்லை. பதிலாக பொருட்களையே கொடுப்பதாக அறிகின்றோம்.
OMP அலுவலகத்தில் பதிவுகளை மேற்கொ்ளள அழைக்கின்றபோது அங்கு மக்கள் செல்வதில்லை. ஆனால் நீதி அமைச்சின் மூலம் பதிவு மேற்கொள்ளப்படுகின்றது என தெரிவித்து மக்களை ஏமாற்றி அழைக்கின்றனர். நீதி அமைச்சின் கீழ்தான் இந்த OMP அலுவலகம் உள்ளது என்பதை பெரும்பாலான எமது உறவுகளிற்கு தெரியவில்லை எனவும், அதற்கு துணை போக வேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார்.