
வருடாந்தம் சுமார் மூன்று லட்சம் பனங்கள் நிலத்தில ஊற்றபதபடுவதாக வடமராட்சி கிழக்கு பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கம் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குறித்த மருதங்கணியில் உள்ள பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்திற்கு நேரடி விஜயத்தை மேற்கொண்டிருந்த போதே அவர்களால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கருத்து தெரிவிக்கும் போது
வீணாக நிலற்றில் ஊற்றப்படும் பனம் கள்ளினை போத்தலில் அடைத்து அதனை விற்பனை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார.

