
மின்னல் தாக்கியதில் இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலை சாரதி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் சற்று முன்னர் அச்சுவேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த, அல்வாய் பகுதியில் திருமணமான 40 வயதுடைய தியாகராசா மதனபாலன் என்பவரே உயிரிழந்துள்ளார். இரு பிள்ளைகளின் தந்தையான இவர்
அச்சுவேலி நாவற்காடு பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் உழுது கொண்டிருநஸத போதே மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். சடலம் அச்சுவேலி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை அச்சுவேலு போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.