யாழ் தேவி தடம்புரள்வு : வழமைக்குத் திரும்பியது புகையிரத சேவை

அனுராதபுரத்திலிருந்து நேற்றிரவு கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த யாழ்தேவி புகையிரதத்தின் பெட்டி ஒன்று தடம்புரண்ட நிலையில், குறித்த புகையிரதப் பெட்டியை மீண்டும் தண்டவாளத்தில் பொருத்தும் பணிகள் இடம்பெற்று வந்ததன் காரணமாக மஹவ தொடருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள நிகவெரட்டிய மற்றும் மொரகொல்லாகம இடையிலான வீதி தடைப்பட்டதுடன் சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் தொடருந்து சேவையும் தாமதமாகியிருந்தது.

இதனையடுத்து, வேறொரு பெட்டிக்கு பயணிகள் மாற்றப்பட்டு கொழும்பு கோட்டை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், தடைப்பட்டிருந்த வடக்கு தொடருந்து சேவை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews