
யாழ்.தெல்லிப்பழை – கட்டுவன்புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் இன்று (05) மாலை உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று 5 ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் தெல்லிப்பழை பகுதி சேர்ந்த எஸ்.மாதுசன் (வயது -18) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுவன் புலம் பகுதியில் வேப்ப மரத்தின் கொப்புகளை வெட்டும் பொழுது பிரதான அதிஉயர் மின்கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்